Mithra Dear

Lilypie

Tuesday, June 30, 2009

அப்பா..

இந்த வார நீயா நானா ( விஜய் டிவி) நிகழ்ச்சி அப்பா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பற்றி . அப்பாக்கள் என்றாலே "தி பாஸ்" என்ற நிலை இப்போ கொஞ்சம் மாறிடுத்து னு தான் சொல்லணும். இந்த தலை முறை அப்பாக்கள் ரொம்பவே ஃப்ரெண்ட்லியா தான் இருக்காங்க . வழிகாட்டி னு சொல்லி சர்வதிகரிய இருக்கிறதை விட, நட்ப இருக்கிற அப்பாக்கள் கிட்டேர்ந்து தான் பசங்க நிறைய கத்துகுறாங்க.

Friday, June 19, 2009

தாய்

குழந்தைக்குதாயின் இடுப்பே இருக்கைதோள்களே தொட்டில்கால்களே கழிவறை!

Monday, June 8, 2009

மித்ரா

மித்ரா - எங்கள் குட்டி தேவதை உதித்த நாள் மே 26 -2009. எங்கள் வாழ்கையின் மிக சிறந்த நாள்... பொய் வாழ்வின் பூரணம் ....அம்மா என்ற வார்த்தைக்கு நிஜமாகவே அர்த்தம் புரிந்த தினம்.

குழந்தை வளர்ப்பு

1. குழந்தை பிறந்தவுடன் எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் தாய் பால் கொடுக்க ஆரம்பியுங்கள்.

2. மருத்துவமனையில் இருக்கும் வரை அவர்கள்( நர்ஸ்) குழந்தையை குளிப்பாட்டுவார்கள் வீட்டுக்கு வந்தவுடன் வீட்டில் பெரியவர்கள் குளிப்பாட்டினாலும், குழந்தையை துவட்டுவது, உடை அணிவிப்பது , ஆயில்,lotion போடுவது போன்ற மற்ற விஷயங்களை நாமே செய்வது நமது ஸ்பரிசத்தை குழந்தைக்கு உணர்த்தும், அதற்கு ஒரு பாதுகாப்பு உணர்வு எழும்.
3.முடிந்தவரை குழந்தைக்கு நாப்பி போடுவதை தவிர்க்கவும். நல்ல தூய்மையான பருத்தி துணிகளை துண்டுகளாகி பயன்படுத்தவும். குழந்தையின் மிருதுவான சருமத்திற்கு இதுவே ஏற்றது.