Mithra Dear

Lilypie
Showing posts with label குழந்தை வளர்ப்பு - பகுதி 1 (கேட்டது. Show all posts
Showing posts with label குழந்தை வளர்ப்பு - பகுதி 1 (கேட்டது. Show all posts

Thursday, December 3, 2009

குழந்தை உணவு

ராகி மால்ட்- 5 மாதம் முதலே குடுக்க ஆரம்பிக்கலாம்.
செய்முறை
1 . சிறிது வெள்ளத்தை சுடு நீரில் ஊற வைக்கவும்.
2 . கை பிடி அளவு ராகி கழுவி நீரில் ஊற வைக்கவும் .( குறைந்தது 2 மணி நேரமாவது ஊற வேண்டும்.)
3 . ஊறிய ராகியை நீர் விட்டு அரைத்து வடிகட்டி பால் எடுத்து கொள்ளவும்.
4 . அதுனுடன் கரைத்த வெல்ல நீரையும் , சிறிது பாலும் விட்டு மிக மிக குறித்த தீயில் அடி கனமான பாத்திரத்தில் விட்டு கிளறவும்.
ஆரம்பத்தில் சிறிது நீர்கவும், சிறி சிறிதாக கெட்டியாகவும் தரலாம். மிகவும் சக்தி நிறைந்தது, ஜீரணிக்க மிக எளிதானது.

Monday, June 8, 2009

குழந்தை வளர்ப்பு

1. குழந்தை பிறந்தவுடன் எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் தாய் பால் கொடுக்க ஆரம்பியுங்கள்.

2. மருத்துவமனையில் இருக்கும் வரை அவர்கள்( நர்ஸ்) குழந்தையை குளிப்பாட்டுவார்கள் வீட்டுக்கு வந்தவுடன் வீட்டில் பெரியவர்கள் குளிப்பாட்டினாலும், குழந்தையை துவட்டுவது, உடை அணிவிப்பது , ஆயில்,lotion போடுவது போன்ற மற்ற விஷயங்களை நாமே செய்வது நமது ஸ்பரிசத்தை குழந்தைக்கு உணர்த்தும், அதற்கு ஒரு பாதுகாப்பு உணர்வு எழும்.
3.முடிந்தவரை குழந்தைக்கு நாப்பி போடுவதை தவிர்க்கவும். நல்ல தூய்மையான பருத்தி துணிகளை துண்டுகளாகி பயன்படுத்தவும். குழந்தையின் மிருதுவான சருமத்திற்கு இதுவே ஏற்றது.