Mithra Dear

Lilypie

Thursday, December 3, 2009

குழந்தை உணவு

ராகி மால்ட்- 5 மாதம் முதலே குடுக்க ஆரம்பிக்கலாம்.
செய்முறை
1 . சிறிது வெள்ளத்தை சுடு நீரில் ஊற வைக்கவும்.
2 . கை பிடி அளவு ராகி கழுவி நீரில் ஊற வைக்கவும் .( குறைந்தது 2 மணி நேரமாவது ஊற வேண்டும்.)
3 . ஊறிய ராகியை நீர் விட்டு அரைத்து வடிகட்டி பால் எடுத்து கொள்ளவும்.
4 . அதுனுடன் கரைத்த வெல்ல நீரையும் , சிறிது பாலும் விட்டு மிக மிக குறித்த தீயில் அடி கனமான பாத்திரத்தில் விட்டு கிளறவும்.
ஆரம்பத்தில் சிறிது நீர்கவும், சிறி சிறிதாக கெட்டியாகவும் தரலாம். மிகவும் சக்தி நிறைந்தது, ஜீரணிக்க மிக எளிதானது.

Tuesday, September 1, 2009

அழகாக இருக்க!- 12 வழிகள்!

அழகாக இருக்க!- 12 வழிகள்!(தமிழ்துளியில் படித்தது)
1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவர்களுக்கும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்தப்பயனும் இல்லை.
2.உங்கள் பழக்க வழக்கங்களை உயர்த்தி மெருகேற்றுங்கள். அன்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும்.
3.உங்களைச் சுற்றி வசீகர அலைகளைப் பரப்பவேண்டுமா? சிரியுங்கள். உங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது உங்கள் சிரித்த முகம் அவர்களை உங்கள்பக்கம் திருப்பும். உங்கள் மன அழகு உங்கள் உடல் அழகை விஞ்சும். உங்களை வசீகரமானவர்களாக மாற்றும்.
4.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உடல் சுகாதாரமாக இருந்தால்தான் உற்சாகமாக இருக்கமுடியும். உடலில் பொங்கும் வலிமையும், சக்தியும் உங்களை சோர்வில்லாமல் இருக்க வைக்கும். சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.
5.உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் குழுவிலிருந்து உங்களைத் தனித்துக் காட்டும். பாட்டு, டான்ஸ் போன்றவற்றில் இருப்பவர்கள் ஈர்ப்பின் மையமாக இருப்பதைப் பார்க்கிறோம். முகம் அழகானவர்களை விட திறமைசாலிகள் கொடிகட்டிப்பற்ப்பதை நாம் காண்கிறோமல்லவா!
6.உங்களிடம் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டீர்கள். அது உங்களைச் சுற்றியுள்ளோருக்குத் தெரியவேண்டுமே!! கல்லூரியில் நுழையும் முதல் வருடத்திலேயே திறமையை வெளிப்படுத்துபவர்களைச் சுற்றி ஒரு நட்புக்குழுவே உருவாகுவதை எல்லோரும் கண்டிருப்போம். திறமைகளைப் பூட்டி வைக்க வேண்டாம். உங்கள் அறிவு, திறமை ஆகியவற்றை உலக அழகிப்போட்டியில் கூட சோதிப்பதைக் கண்டிருப்பீர்கள்!
7.நோகடிக்கும், பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். எல்லோரிடமும் குறையிருக்கும். இதைப் பெரிது படுத்தாதீர்கள். பெருந்தமையாக பாராட்டிப் பேசும் உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்குமே!!
8.உன்னால் முடியாது என்று சொல்லும் நபர்களைக் கண்டுகொள்ளாதீர்கள். திறம்பட செய்யமுடியும் என்ற நம்பிக்கை எண்ணமே உங்களைத் தனித்தன்மையுடன் காட்டும்.
9.உங்கள் உள்ளேயே ஒரு குரல் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். ஒவ்வொரு சிறந்த செயல்பாட்டையும் அது தடுத்துவிடும். தள்ளிப்போடும். முடங்கிப்போய் இருப்பவர்கள் அழகாகக் காட்சியளிக்க முடியாது.
10.பொறாமையை விட்டுத்தள்ளுங்கள். பிறருடைய திறமை, பணம், புகழ் ஆகியவற்றைப் பார்த்துப் பொறாமைப் படுவதைவிட உங்கள் வாழ்வை, செயல்களைத் திருப்திகரமாகச் செய்து பாருங்கள். உங்கள் உள்ளத்திருப்தி உங்கள் முகப் பொலிவைக் கூட்டிவிடும்.
11.உங்களுக்கே உங்களைப் பிடிக்காமல் இருக்கலாம். உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத பட்டியல் நிறைய இருக்கும். அதையெல்லாம் புறந்தள்ளுங்கள். உங்கள் முக அமைப்பையோ, நிறத்தை,உயரத்தைப் பற்றியெல்லாம் படும் கவலைகளை விட்டொழியுங்கள். உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும்.
12.குறைந்த அளவான மேக்கப், பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், நகங்கள், பாதங்களை சீராக வைத்துக்கொள்ளுதல், உடையில் கவனமாக இருத்தல், உடலில் மெல்லிய நல்ல நறுமணம் வீசும் வண்ணம் இருத்தல் ஆகியவை பொதுவாக அழகு சேர்க்கும் என்பது உங்களுக்கே தெரியும்.

Posted using ShareThis

Tuesday, June 30, 2009

அப்பா..

இந்த வார நீயா நானா ( விஜய் டிவி) நிகழ்ச்சி அப்பா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பற்றி . அப்பாக்கள் என்றாலே "தி பாஸ்" என்ற நிலை இப்போ கொஞ்சம் மாறிடுத்து னு தான் சொல்லணும். இந்த தலை முறை அப்பாக்கள் ரொம்பவே ஃப்ரெண்ட்லியா தான் இருக்காங்க . வழிகாட்டி னு சொல்லி சர்வதிகரிய இருக்கிறதை விட, நட்ப இருக்கிற அப்பாக்கள் கிட்டேர்ந்து தான் பசங்க நிறைய கத்துகுறாங்க.

Friday, June 19, 2009

தாய்

குழந்தைக்குதாயின் இடுப்பே இருக்கைதோள்களே தொட்டில்கால்களே கழிவறை!

Monday, June 8, 2009

மித்ரா

மித்ரா - எங்கள் குட்டி தேவதை உதித்த நாள் மே 26 -2009. எங்கள் வாழ்கையின் மிக சிறந்த நாள்... பொய் வாழ்வின் பூரணம் ....அம்மா என்ற வார்த்தைக்கு நிஜமாகவே அர்த்தம் புரிந்த தினம்.

குழந்தை வளர்ப்பு

1. குழந்தை பிறந்தவுடன் எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் தாய் பால் கொடுக்க ஆரம்பியுங்கள்.

2. மருத்துவமனையில் இருக்கும் வரை அவர்கள்( நர்ஸ்) குழந்தையை குளிப்பாட்டுவார்கள் வீட்டுக்கு வந்தவுடன் வீட்டில் பெரியவர்கள் குளிப்பாட்டினாலும், குழந்தையை துவட்டுவது, உடை அணிவிப்பது , ஆயில்,lotion போடுவது போன்ற மற்ற விஷயங்களை நாமே செய்வது நமது ஸ்பரிசத்தை குழந்தைக்கு உணர்த்தும், அதற்கு ஒரு பாதுகாப்பு உணர்வு எழும்.
3.முடிந்தவரை குழந்தைக்கு நாப்பி போடுவதை தவிர்க்கவும். நல்ல தூய்மையான பருத்தி துணிகளை துண்டுகளாகி பயன்படுத்தவும். குழந்தையின் மிருதுவான சருமத்திற்கு இதுவே ஏற்றது.

Friday, May 22, 2009

வால் பையன்

பெரியவன் சிபி எத்தனைக்கு எத்தனை அம்மா பேச்சு கேப்பானோ , அந்த அளவு சின்னவன் அபி சரியான வால் பையன்... சிபி சின்ன விஷயம் ஆனாலும் அம்மா கிட்ட சொல்லாம எதையும் செய்ய மாட்டான்...ஆனால் அபி எதையும் செய்திட்டு தான் சொல்வான். ஃபிரிட்ஜ் ஷெல்ப்ஸ் தான் அவனுக்கு ஏணி படிகள்.
D.A.V School சேர்க்கை நாள். புதுசா Pre K.G சேர்ர குழந்தைகள் எல்லாரையும் கிளாஸ் ரூம் ல உட்கார சொன்னாங்க . அபி என்ன செய்வனோன்னு எங்க அக்கா ரொம்ப பயந்தா .. ஆனா அவனோ சமத்தா போய் உட்கார்துட்டு டாட்டா வேற சொல்றான் .. இந்த காலத்து குழந்தைகளை புரிங்குகவே முடியலை..........யப்பா...........

Tuesday, May 19, 2009

பிரசவத்திற்கு முன்!

ஹப்பா.. 9 மாத காத்திருப்பை விட இந்த கடைசி ஒரு 10 நாட்கள் காத்திருப்பது ரொம்ப கஷ்டம்... எப்போ வலி வரபோகுதுன்னு ஒவ்வொரு நொடி எதிர்பார்த்துட்டே இருக்கேன்

Tuesday, May 5, 2009

என் குட்டி Chellam

வரும் வாரத்தில் இருந்து ஹோம் maker
இன்னும் இரண்டே வாரங்கள் தான் .. என் குட்டி செல்லம் வரதுக்கு .. நிறைய எதிர்பார்ப்பு.. கொஞ்சம் பயமா இருக்கு...

Singapore

சிங்கபூரில் நாங்கள்....சீக்கிரம் எழுதுறேன்
The Quality of Life is not depends on the situation and circumstance you come across but on how you respond to them